Thursday, June 22, 2023

கோயிலில் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்கிறார்களே, சரியா..?

💫கோயிலில் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்கிறார்களே, சரியா..?

🔯சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று...

அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்க வாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். 

அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டு கோளைச் சொல்கிறேன் பேர்வழி என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று.

பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.

Sunday, June 4, 2023

12 ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள் ...!

🌺🙏12 ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள் ...!

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி,  ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி 

கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

*மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

 மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.

*புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ் வரன்கோவில், 

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.

* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில், மதுரை அருகில்.

*உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

 உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூ ரார் – கரூர்.

* சித்திரை 1 , 2  (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

 விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்

* பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடை யார் கோவில்.

*உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம் 1,2  (மகரம்) ; அவிட்டம் 3,4  (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட் டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடரா ஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோ கி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன் றம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

* புனர்பூசம் 1, 2, 3 (மிதுனம்) =ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீ ஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.

* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) 

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும் பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவன ந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

*மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர், அழகர் கோவில், மதுரை அருகில்.

* உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) =ஸ்ரீஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீ கரூவூரார் – கரூர்.

* சித்திரை 1,2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

 * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாய தாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை (விருச்சிகம் ) ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

*மூலம் (தனுசு)=ஸ்ரீபதஞ்சலிராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

*பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார் கோவில்.

*உத்திராடம்1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம் (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம் 1 , 2  (மகரம்); அவிட்டம் 3, 4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீ சிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட்டா.

* பூரட்டாதி4 (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரம ஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங் குன்றம்.

* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

Saturday, May 20, 2023

50 - ஆன்மீககேள்விகளும்-பதில்களும்ஏன் ? எதற்கு? எப்படி?

50 - ஆன்மீக
கேள்விகளும்-பதில்களும்
ஏன் ? எதற்கு? எப்படி?

1 - வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

3 - கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை
மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

5 - சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

6 - கனவில் பாம்பு அடிக்கடி
வருகிறது. அதைத் தவிர்க்க
ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

7 - பூஜை, விரதம்
போன்றவற்றை பெண்கள் மட்டுமே
கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?

இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

8 - மாலை நேரத்தில் சாப்பிடக்
கூடாது என்று பெரியவர்கள்
சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

9 - வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?

பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.

10 - திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்?

சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

11 - கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

12 - சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

13 - நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

14 - பஞ்சாங்கத்தில் நட்சத்திரம்,
திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

15 - கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன?

மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.

16 - விளக்கேற்றக் கூடிய
திசைகள் யாவை?

கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

17 - நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

18 - பிரதோஷம் என்றால் என்ன?
அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?

தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

19 - ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன?

மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு.
ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார்.

20 - புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.

21 - சுவாமிக்கு சாத்திய
மாலையை வாகனத்தின் முன்
கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள்
பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை
காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது.வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.

22 - சிவலிங்க வழிபாட்டை
வீட்டிலேயே செய்வது சரியா?

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.

23 - பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன?

காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும்.

இவற்றைச் சரியாக
செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.

24 - திருமணத்திற்குப் பின்
பெண்கள் பிறந்த வீட்டு குல
தெய்வத்தை வழிபடலாமா?

புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.

25 - ஸ்ரீராமஜெயம் எழுதிய
நோட்டை நதியில் விட்டுவிடலாமா?

ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

26 - வீட்டிலிருந்து கிளம்பும்போது
மூன்று பேராகச் செல்லக்கூடாது
என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

27 - வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை?

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

28 - அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா?

எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

29 - செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள்?

செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.

30 - சுபநிகழ்ச்சிகளுக்கு
வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

நவக்கிரகங்களில் ஒருவரான
சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

31 - அறுபது வயதடைந்த
அனைவரும் 60ம் கல்யாணம்
கட்டாயம் நடத்த வேண்டுமா?

நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.

32 - சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா?

பிச்சை எடுப்பதே தவறு. இதில் கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!

33- ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி?

இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.

34 - பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்?

எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.

35 - கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா?

நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது.

அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.

36 - பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

37 - தற்காலத்தில் புத்திர
காமேஷ்டி யாகம் செய்கிறார்களா?
விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்?

புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் y செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.

38 - கோயிலில் அரசமரம்,
வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?

அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

39 - மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்?

இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

40 - வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்

41 - யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?

இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.

42 - கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?

அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

43 - கடவுளின் படம் அல்லது சிலை
எது வழிபாட்டிற்கு உகந்தது?

மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.

44 - ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?

சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்.

45 - வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா?

வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

46 - ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்?

மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.

47 - சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா?

அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.

48 - அம்மனுக்குப் பூக்குழி இறங்குவது
(தீ மிதித்தல்) எப்படி சாத்தியமாகிறது?

நம்பிக்கையும் பக்தியும் முழுமையாக இருந்தால் சாத்தியம் தான். இந்நிலையில் இருப்பவர்களை மருளாளிகள் என்பர். பக்தி மிகுதியால் ஏற்படும் பரவச நிலையை மருட்சி என்று அழகிய தமிழ்ச்சொல் குறிப்பிடுகிறது. மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்குத் தீயும், பூவும் ஒன்றாகத் தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம் தான்.

49 - கோயிலில் தெப்பக்குளம்
இருப்பதன் நோக்கம் என்ன?

திருக்குளம் என்ற பெயர் தான் முக்கியம். அதில் தெப்பம் விடுவதால் தெப்பக்குளமாகி விட்டது. திருக்குளம் அடிப்படையிலேயே சிந்திப்போம். ஒரு கோயிலில் மூல மூர்த்தியாக விளங்கும் தெய்வம் எப்படி முக்கியமோ, அதுபோலவே தீர்த்தம் (திருக்குளம்), தலவிருட்சம் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பாக அமையும் கோயில் தான் க்ஷேத்திரம் என போற்றப்படும்.

50 - சித்திரை மாதத்தில் பிள்ளை
பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சொல்லப்படுவது உண்மையா?

இல்லை...
இது முற்றிலும் தவறான கூற்று.

Shared as received. 17.5.23.50 - ஆன்மீக
கேள்விகளும்-பதில்களும்
ஏன் ? எதற்கு? எப்படி?

1 - வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

3 - கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை
மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

5 - சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

6 - கனவில் பாம்பு அடிக்கடி
வருகிறது. அதைத் தவிர்க்க
ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்படu ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

தினம் ஒரு திருத்தலம்.. கறுப்பு⚫.. வெள்ளையாய்⚪ நிறம் மாறும் அதிசய விநாயகர்..!!

தினம் ஒரு திருத்தலம்.. கறுப்பு⚫.. வெள்ளையாய்⚪ நிறம் மாறும் அதிசய விநாயகர்..!! அருள்மிகு கேரளபுரம் விநாயகர் திருக்கோயில்...!! 

 🌈 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கேரளபுரம் விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க... இந்த கோயில் எங்கு உள்ளது? 🌈 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரளபுரம் என்னும் ஊரில் அருள்மிகு கேரளபுரம் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? 🌈 கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ தொலைவில் கேரளபுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. கேரளபுரத்திலிருந்து சிறிது தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? 🌈 இக்கோயிலின் பிரதான இறைவனாக விநாயகர் அருள்பாலிக்கிறார். 🌈 இந்த கோயிலின் விநாயகர் விக்கிரகம் அபூர்வமான இந்திர காந்த கல் வகையை சார்ந்தது ஆகும். 🌈 கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரையில் உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரையில் தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் நிறம் மாறி காட்சியளிப்பது இக்கோயிலில் தனிச்சிறப்பு ஆகும். 🌈 முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்பு புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார் என்பது அபூர்வமான நிகழ்வு ஆகும். வேறென்ன சிறப்பு? 🌈 மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்த விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 🌈 அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்த விநாயகர் ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்தார். ஆனால், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாக திகழ்கிறார். 🌈 இத்தலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பல அதிசயமான நிகழ்வுகள் நடக்கின்றன. இதனை இங்கு வரும் பக்தர்கள் விநாயகரின் விளையாட்டு என்று கொள்கின்றனர். 🌈 சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இந்த கேரளபுரம் விநாயகர் கோயில் விளங்குகிறது. என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? 🌈 விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆகியவை இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? 🌈 வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிடைக்க இங்குள்ள விநாயகரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? 🌈 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தினம் ஒரு திருத்தலம்...🛕 அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்...!!

தினம் ஒரு திருத்தலம்...🛕
 அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில்...!! 

இந்த கோயில் எங்கு உள்ளது?

 கேரளா மாநிலம்‚ ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் அருள்மிகு முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது.

 இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

 கேரளாவிலிருந்து சுமார் 162 கி.மீ தொலைவில் ஆலப்புழா அமைந்துள்ளது. ஆலப்புழாவிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன? இத்தலத்தில் அமைந்துள்ள அம்மன் மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் 5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மக்கள் நிழலில் நின்று அம்பாளை தரிசிக்க‚ அம்பாள் வெயிலில் நின்று அற்புதமாய் தரிசனம் தருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது. இத்தலத்தில் திருவிழாவின்போது 41 நாட்களும் அம்மனுக்கு சந்தன அபிஷேகம் நடைபெறுகின்றன. இத்தலத்தில் மேற்கூரை இல்லாமல் மூலஸ்தானம் அமைந்துள்ளது. மழை காலத்தில் ஒரு சிறு ஓலை வைத்து கூரையை மூடுகிறார்கள். 

வேறென்ன சிறப்பு?

 இத்தலத்தில் கணேசர்‚ முருகன்‚ கிருஷ்ணர்‚ ஆஞ்சநேயர்‚ ஐயப்பன்‚ நவகிரகம் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு கார்த்திகை 1ஆம் தேதி முதல் மார்கழி 11ஆம் தேதி வரை 41 நாட்கள் களபாபிஷேகம் (சந்தனம்) நடைபெறுகிறது. இக்கோயிலில் தினமும் பஞ்சாமிர்த அபிஷேகமும்‚ சிறப்பு பூஜைகளும்‚ அர்ச்சனையும் நடைபெறுகிறது.

 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

 சரஸ்வதி பூஜை‚ நவராத்திரி விழா ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

 இத்தலத்தில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். 

 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 
 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சந்தனத்தில் அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Friday, May 19, 2023

தினம் ஒரு திருத்தலம் - மருதமலை முருகன்

தினம் ஒரு திருத்தலம்

 முருகன் ஸ்தலம்
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

மருதமலை முருகன் கோயில்
கோயம்புத்தூரிலிருந்து 15-கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.
முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.
[1] முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது
இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.
[2] உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.

Wednesday, May 3, 2023

நரசிம்ம ஜெயந்தி, 2023 மே 04 ம் தேதி

நரசிம்ம ஜெயந்தி, 2023 மே 04 ம் தேதி

உக்கிர வடிவமாக இருந்தாலும் அதிகமானவர்களால் வணங்கப்படும் ரூபம் நரசிம்ம ரூபமாகும்.

நரசிம்மர் அவதரித்த தினமான நரசிம்ம ஜெயந்தி, 2023 மே 04 ம் தேதி கொண்டாடப்படுகிறது.  

நரசிம்மரைப் பற்றி அரிய விஷயங்கள் சில. 

நரசிம்ம பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை கண்திறப்பதும், அவருக்கு படைக்கப்படும் பானகத்தை குடிப்பதும் இந்த கலியுகத்திலும் நடந்து வரும் அற்புத நிகழ்வுகளாகும். கலியுகத்திலும் பக்தர்களைக் காக்க ஓடோடி வரும் தெய்வமாக நரசிம்மர் விளங்குகிறார். மனித உடலும், சிம்ம முகமும் கொண்ட நரசிம்ம ரூபம், பெருமாளின் அற்புத வடிவங்களில் ஒன்றாகும்.

நரசிம்மர் :
திருமாலின் தச அவதாரங்களில் மிகவும் தனித்துவமானது நரசிம்ம அவதாரம். தாயின் கருவில் இருந்து தோன்றாமல், தனது பக்தனைக் காப்பதற்காக தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டவர் நரசிம்மர். தாயின் கருவில் உருவாகி, வளர்ந்து வருவதற்கு தாமதமாகி விடும். அதுவரை தனது பக்தன் துன்பப்படுவானே என்பதற்காக, பக்தனைக் காப்பதற்காக அடுத்த கணமே ஓடோடி வந்தவர் நரசிம்மர்.

அதனால் தான் தீராத துன்பத்தில் இருந்து உடனடியாக மீள வேண்டும் என்றால் நரசிம்மரின் கால்களைப் பிடிக்க வேண்டும் என சொல்வார்கள். உக்ரமான வடிவங்கள் என வணங்குவதற்கு அஞ்சும் நரசிம்மர், காளி போன்ற தெய்வ ரூபங்கள், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் எடுக்கப்பட்ட வடிவங்களாகும். நரசிம்மர் பல இடங்களில் உக்ர வடிவத்துடன் காட்சி தந்தாலும், சில இடங்களில் சாந்த சொரூபமாக, யோக நிலையில் காட்சி தருகிறார். இன்னும் சில இடங்களில் லட்சுமியை தனது தொடை மீது அமர வைத்து, ஆலிங்கனம் செய்தபடி, புன்னகையுடன் லட்சுமி நரசிம்மராக காட்சி தருகிறார். 

நரசிம்மரைப் பற்றி 18 அரிய தகவல்கள்.

1. நரசிம்மரை வழிபடுபவர்களை எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாது.

2. நரசிம்மருக்கு விருப்பமான சிவப்பு அரளி, செம்பருத்தி பூக்களால் அர்ச்சித்து, நைவேத்தியமாக பானகம் படைக்க வேண்டும்.

3. நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

4. நரசிம்ம ஜெயந்தி நாளில் நரசிம்மரை எந்த ரூபத்திலும் வழிபடலாம். கலசம் வைக்க வேண்டிய அவசியமில்லை.

5. பெண்களும் நரசிம்மரை விரதமிருந்து வழிபடலாம். ஆனால் உடல் தூய்மையும், மனத்தூய்மையும் அவசியம்.

6. வீட்டில் நரசிம்மரை வழிபடுவதாக இருந்தால் வடமேற்கு திசையில் வைத்து வணங்க வேண்டும்.

7. நரசிம்ம ஜெயந்தி அன்று குழந்தைகளுக்கு நரசிம்ம அவதாரம் பற்றிய கதையைக் கூறினால், பிரகலாதனுக்கு கிடைத்த நரசிம்மரின் அருள், அந்த குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

8. நரசிம்மருக்காக விரதம் இருக்கும் போது கண்டிப்பாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

9. நரசிம்மரின் அருளை சீக்கிரம் பெற விரும்புபவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

10. வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் நரசிம்மரை வழிபட்டுவிட்டு சென்றால் வெற்றி கிடைக்கும்.

11. பிரகலாதனைப் போல் உறுதியான பக்தி கொண்டவர்களுக்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார்.

12. நரசிம்மரை வழிபட்டு வந்தால் பெயர், புகழ் ஆகியவை கிடைக்கும்.

13. நரசிம்மரை, மருத்யுவேஸ்வாகா என கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

14. பக்தியுடன் தன்னை சரணடையும் பக்தர்களை எப்படி நரசிம்மருக்கு பிடிக்குமோ, அது போல, உரிமையுடன் இதை எனக்கு செய்து கொடு என கேட்கும் பக்தனையும் நரசிம்மருக்கு பிடிக்கும். அவர்கள் கேட்டதை உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.

15. நரசிம்மர் கோவில் கொள்ளும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

16. நரசிம்மர், பிரகலாதனுக்காக அந்திப்பொழுதில் அவதரித்த தினம் வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகும். .

17. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார், பக்தன் உண்மையான பக்தியுடன் அவரை அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எடுக்கப்பட்டதே நரசிம்ம அவதாரம் ஆகும்.

18. ராமருக்கு அடுத்தபடியாக வைணவர்களால் அதிகம் வணங்கப்படும் திருமாலின் ரூபமாக நரசிம்மர் உள்ளார்.

சித்திரா பௌர்ணமி

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

**சித்திரா பௌர்ணமி அன்று சித்திர குப்தனின் ஏட்டில் நமது முதல் பக்கத்தில் புண்ணிய கணக்கை  சித்திரகுப்தரால் எழுத வைப்போம்!!! -- ராமேஸ்வரம், மற்றும் திருச்சி சமயபுரத்தில் அன்னதானம் செய்வோம்!!!**

**சித்திரா பௌர்ணமி மே மாதம் 05 ஆம் தேதி**

**சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வதுதான் நம் புண்ணியங்கள் பெறுவதற்கான முதல்வழி. வாருங்கள்,  திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் அன்னதானம் செய்வோம்.**

சித்ரா பௌர்ணமி  என்பது புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் ஆகும். நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, அல்லது சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.

**சித்திரா பௌர்ணமி புராண  கதையை பார்ப்போம்.**

தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர் என்கிறது புராணம்.

**சித்ரா பௌர்ணமி சிறப்பு**

இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும். மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ராபௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.

**செவ்வாய் தோஷம் நீங்கும்.**

நவக்கிரக கேதுவின் தேவதை சித்திரகுப்தர். எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும். கடன் பிரச்சினைகள், சத்ரு துன்பங்கள் நீங்கி சுலபமாகும்.  நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோசனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது. திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால்  செவ்வாய் தோஷம் நீக்குகிறது. சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னைதினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.

**தோஷம் போக்கும் சித்ரகுப்தன்**

நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், "ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்" இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில் யமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தருக்கும் தனி சன்னதி உண்டு. காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு கோவில் உள்ளது. இங்கு இவரை தரிசனம் செய்வதால் வாழ்வில் நல்ல பலன் கிடைக்கும். .
அன்னதானம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைகள் காற்றோடு கரையும் கற்பூரம் போல, காணாமல் போகும்.

Tuesday, May 2, 2023

தங்கத்தை சேர்க்க நினைக்கும் பெண்கள் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்

தங்கத்தை சேர்க்க நினைக்கும் பெண்கள் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்

தங்கம் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூட தேவையில்லை தானாகவே தங்கம் வாங்கும் யோகம் உங்களைத் தேடி வரும்

வீட்டில் தங்க நகை அதிகமாக சேர வீட்டில் தங்கம் பெருக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. தங்கத்தை நாம் மதிப்புடன் பாதுகாத்து வைக்க வேண்டும். தங்க நகையும் கவரிங் நகையும் எப்போதும் ஒன்றாக வைக்க கூடாது. அதே போல் நாம் அணியும் நகைகளை ஆங்காங்கே கழற்றி வைக்கவும் கூடாது. அது மட்டும் இன்றி வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் நாம் வீட்டில் எப்போதும் அணிந்திருக்கும் நகைகளை கழட்டவே கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

நாம் அணிந்திருக்கும் நகைகளை பிறருக்கு தருவதை முடிந்த வரையில் தவிர்த்து விடுவது நல்லது. ஒரு வேளை அப்படி நகைகளை மாற்றி அணிந்து கொள்ளும் சூழ்நிலையோ அல்லது தர வேண்டிய சூழ்நிலையோ வந்தாலும் உப்பு தண்ணீரில் நகையை அலசிய பிறகு தான் தர வேண்டும். நாம் போடுவதாக இருந்தாலும் இவ்வாறு செய்த பிறகு தான் போட வேண்டும். இதையெல்லாம் சரிவர செய்தாலே தங்கம் நம்மிடம் நிலைத்திருக்கும். நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்ஷமும் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.

இத்துடன் நீங்கள் எப்பொழுது நகை வாங்க செல்வதாக இருந்தாலும் ஒரு சிறிய மூக்குத்தியாக இருந்தாலும் கூட அதை வாங்க செல்லும் நாள் புதன்கிழமையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். புதன்கிழமை என்றதும் அந்த நாள் கரிநாளாகவோ அல்லது அன்றைய நாளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருந்தாலும் நகை வாங்கக் கூடாது. புதன்கிழமை நகை வாங்க உகந்த நாள் தான். ஆனால் அந்த நாளில் அசுப திதிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.இவையெல்லாம் செய்த பிறகு தங்கம் வாங்க செல்வதற்கு முன்பாக இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்த பிறகு நகை வாங்க செல்ல வேண்டும்.

மந்திரம்

ஓம் தங்க கணபதி வசிய வசிய நமஹ 

இந்த மந்திரத்தை சொன்ன பிறகு நீங்கள் வாங்கும் ஒரு குண்டு மணி தங்கம் கூட பல சவரன் நகையாக உங்களிடம் பெறுவதற்கான வாய்ப்பைத் தேடித் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கம் வாங்க செல்லும் நாள், இந்த மந்திர சொல்லும் நேரம் நீங்கள் நகை வாங்கும் நேரம் எல்லாமே அன்றைய நாளில் நல்ல நேரமாக பார்த்து செய்து கொள்ளுங்கள். இதை ராகு காலம் எமகண்டம் நேரத்தில் இதை சொல்ல கூடாது.

Monday, May 1, 2023

திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப்(கடல் நுரை) பிள்ளையார்

கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், *திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார்.*

இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன. விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது.

கடல்நுரையாலான இவர் அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர். இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார்.

 தமிழகத்தில் வெள்ளை நிறத்தில் விநாயகரை தரிசிப்பது அரிது. 

தசாங்கம் என்றால் என்ன?

தசாங்கம் என்றால் என்ன? 
தசாங்கம் என்பது தூபம் போட பயன்படும் ஒரு வகை சாம்பிராணி ஆகும். ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் ஒரு பொருள். அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான ஒரு பொருள். இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்துவம் வாய்ந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிறது. இவை சித்தர் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

தசாங்கத்தில் உள்ள பொருட்கள்: 
1. வெட்டி வேர் 
2. லவங்கம்
3. வெள்ளை குங்குலியம் 
4. ஜாதிக்காய் 
5. மட்டிப்பால்
6. சந்தான தூள் 
7. நாட்டு சர்க்கரை 
8. திருவட்ட பச்சை 
9. சாம்பிராணி 
10. கீச்சிலி கிழங்கு 

தசாங்கம் ஊதுபத்தி பலன்கள்: 

இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உள்உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம். இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மனம் நிறைந்து இருக்கும். உங்கள் தெருவே மணக்கும். 

தசாங்கம் ஊதுபத்தி பயன்படுத்தும் முறை: 

தசாங்கம் ஏற்றி வீடுகளில் மூலை, முடுக்குகள் விடாமல் காண்பிக்க வேண்டும். இறைவனுக்கு காண்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும் படி காண்பிக்க வேண்டும். திருஷ்டி கழிப்பதற்கு யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம். சகல விதமான ஐஸ்வர்யமும் வீட்டில் சேரும்.

Sunday, April 30, 2023

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!

எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

Thursday, April 27, 2023

காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்